Home / சினிமா / நடிகர் கமல்ஹாசனை தேடிவந்த கவுரவ டாக்டர் பட்டம்

நடிகர் கமல்ஹாசனை தேடிவந்த கவுரவ டாக்டர் பட்டம்

நடிகர் கமல்ஹாசனை நாம் எல்லோரும் அறிவோம் அவர் ஒரு சிறந்த நடிகர் . எல்லாத்துறைகளிலும் கில்லாடி எனலாம் .இவர் திறமைக்கு ஆயிரம் விருதுகள் கிடைத்தாலும் நாளை இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட இருக்கின்றது .

அதாவது நடிகரும், மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமலுக்கு, ஒடிசாவில் உள்ள செஞ்சுரியன் பல்கலை., சார்பில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது. நாளை (நவ.,19) நடைபெற இருக்கும் பட்டமளிப்பு விழாவில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், கமலுக்கு டாக்டர் பட்டம் வழங்குகிறார்.

இதற்காக ஒடிசா சென்ற கமல், புவனேஸ்வரில் முதல்வர் நவீன் பட்நாயக்கை சந்தித்தார். மேலும், பரமக்குடி திறன் மேம்பாட்டு மையத்திற்கு ‘கிராம் தரங்’ திட்டத்தின் கீழ் வழிகாட்டுதல் வழங்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *