ஜோடியாக ஒரு படத்தில் இணைந்தாலே ஹீரோ ஹீரோயின் இருவரும் காதல் வயப்படுவது பல முறை நடந்துள்ளது. பல நட்சத்திர ஜோடிகள் நடிக்கும்போது காதலித்து திருமணமும் செய்துகொண்டுள்ளனர். திருமணவாழ்விலும் வெற்றிகொண்டுள்ளனர் .
இந்நிலையில் ஜீ.வி.பிரகாஷின் புரூஸ்லீ பட புகழ் பிரபல நடிகை க்ரித்தி கர்பந்தா தான் ஒரு முன்னணி நடிகரை காதலித்து வருவதாக ஓப்பனாக பேட்டி கொடுத்துள்ளார்.
Pagalpanti என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த Pulkit Samrat என்பவரை தான் க்ரித்தி காதலிக்கிறாராம். காதலிப்பதை முதலில் அவரது பெற்றோரிடம் தான சொன்னாராம் க்ரித்தி. உண்மையிலே இவருக்கு தைரியம்தான் .
பல நடிகைகள் சொந்த வாழ்க்கை பற்றி பேசவே பயப்படும் நிலையில் தற்போது க்ரித்தி வெறும் ஐந்தே மாதத்தில் காதலை அதிரடியாக மீடியாவிடம் கூறியுள்ளது பலருக்கும் ஆச்சர்யம் ஏற்படுத்தியுள்ளது. இவரின் காதல் வெற்றியடைய பிரபலங்கள் வெற்றியடைந்து வருகின்றனர் .