Home / சினிமா / நிறைவேறிய தமன்னாவின் மிகப்பெரிய கனவு

நிறைவேறிய தமன்னாவின் மிகப்பெரிய கனவு

திரையுலகில் ஹீரோயினாக நுழைந்து பிரபலமானவர்களில் ஒருவர்தான் நடிகை தமன்னா .இவர் பல படங்களில் சிறப்பாக நடித்துள்ளார் .திரைக்கு வரும் நடிகைகள் அடுத்த வருடமே தங்கள் லட்சியம், ரஜினி, கமல் ஆகியோருடன் ஜோடியாக நடிக்க வேண்டும் என்பது தான் பல கதாநாயகிகளின் ஆசையாக ஆக இருந்து வந்தது.

தற்போது வேண்டுமானால் அது அஜித், விஜய் என மாறி இருக்கலாம்.. அப்படி நீண்ட நாட்களாக ரஜினியுடன் நடிக்க முடியாத ஏக்கத்தில் இருந்த த்ரிஷா, சிம்ரன் போன்றவர்களுக்கு பேட்ட படத்தில் அவருடன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அதேப்போல நடிகை தமன்னாவும் சினிமாவிற்கு வந்து கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேலான, நிலையில் விஜய், அஜித் என தற்போதைய முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்து விட்டாலும், ரஜினி, கமலுடன் நடிக்கும் ஆசை மட்டும் இன்னும் கனவாகவே இருக்கிறது. அவர் கனவை நிறைவேற்ற அவரும் கடினமாக உழைக்கின்றார் .

இந்த நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற கமல் 60 விழாவில் நடிகை தமன்னாவும் கலந்து கொண்டார். அப்போது ரஜினி, கமல் இருவரும் ஒன்றாக இணைந்து நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார் தமன்னா.. படவாய்ப்பு இல்லை என்றாலும் ஒன்றாக இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டதே தமன்னாவுக்கு தற்காலிகமாக பெரிய சந்தோஷத்தை கொடுத்திருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *