Home / சினிமா / காயத்ரி ரகுராமின் டுவிட்டர் பக்கம் திடீர் முடக்கம்

காயத்ரி ரகுராமின் டுவிட்டர் பக்கம் திடீர் முடக்கம்

நடன இயக்குனராக பல படங்களில் பணியாற்றி இருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அதிகம் பிரபலமானவர்தான் நடிகை காயத்திரி ரகுராம் .சினிமா பிரபலங்கள் பலர் சினிமா துறையை தாண்டி அரசியலிலும் ஈடுபட்டு வருகின்றனர். அப்படி ஒரு கட்சியில் இருந்து பின் அதில் இருந்து வெளியே வந்தவர் காயத்ரி ரகுராம்.

சமூகத்தில் நடக்கும் விஷயங்கள் குறித்து தனது கருத்தை டுவிட்டரில் எப்போதும் பதிவு செய்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அரசியலில் நடந்த ஒரு விஷயம் குறித்து அவர் டுவிட்டரில் வீடியோவுடன் பதிவு செய்திருந்தார்.

இந்த நிலையில் அவர் வீடியோ பதிவு செய்த தலைவர் கட்சியின் ஐடி விங் அளித்த புகாரின் பேரில் காயத்ரி ரகுராம் டுவிட்டர் பக்கம் திடீரென முடக்கப்பட்டுள்ளது. எப்போதும் டுவிட்டரில் ஆக்டீவாக இருக்கும் காயத்ரிக்கு இது இழப்பாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *