Home / செய்திகள் / தேனிலவு சென்ற இடத்தில் சோகம் : 10 நாளில் உயிரிழந்த கணவன்

தேனிலவு சென்ற இடத்தில் சோகம் : 10 நாளில் உயிரிழந்த கணவன்

தேனிலவு சென்ற இடத்தில் திருமணமான 10 நாட்களில் கணவன் இறந்துள்ளார் .சென்னை அமைந்தகரையைச் சேர்ந்த அரவிந்த் என்பவருக்கும், அதே பகுதியினைச் சேர்ந்த பிரீத்தி என்பவருக்கும் கடந்த 10ம் திகதி உறவினர்கள் வாழ்த்த கோலாகலமாக திருமணம் நடைபெற்றுள்ளது.இவர்கள் இருவரும் தேனிலவுக்காக இமாச்சலப் பிரதேசத்திற்கு சென்றுள்ளனர் .

அங்கு பிரபலமான பாரா க்ளைடிங் விளையாட்டில் செல்வதற்கு அரவிந்த் டிக்கெட் எடுத்துள்ளார். திரில் விளையாட்டு என்றால் அரவிந்திற்கு ஆர்வம் அதிகமாம். முதலில் இதற்கு மறுப்பு தெரிவித்த மனைவி பின்பு கணவரின் ஆசைக்காக அவரை அனுப்புவதற்கு சம்மதம் தெரிவித்து, பாராசூட்டில் பயிற்சி பெற்ற சுற்றுலா பயணியுடன் அவரை அனுப்பியுள்ளார்.

பாராசூட்டில் பறந்த கணவனை காணொளியாக எடுத்து ரசித்துக்கொண்டிருந்த தருணத்தில், அரவிந்த்
பாராசூட்டிலிருந்து மனைவியின் கண்முன்னே கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

அரவிந்தின் பெற்றோர்கள் இமாச்சலப் பிரதேசத்திற்கு சென்று, மகனின் உடலைப் பெற்றுக்கொண்டு இன்று இறுதிச்சடங்கு செய்துள்ளனர்.

கணவர் அரவிந்தின் உடலைப் பார்த்து பிரீத்தி, ஆரம்பத்திலே நான் வேண்டாம் என்று சொன்னேனே கேட்டீங்களா? என்று கதறி துடித்துள்ளார்.
அரவிந்த் உடன் சென்ற விமானியும் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதையடுத்து பொலிசாரின் விசாரணையில், பாதுகாப்பு பெல்ட்டை அரவிந்த் சரியாக அணியாததால் தான் விபத்து நிகழ்ந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *