Home / சினிமா / இந்த படத்தில் நான் நடிக்கமாட்டேன் ,மறுப்பு தெரிவித்த அனுஷ்கா

இந்த படத்தில் நான் நடிக்கமாட்டேன் ,மறுப்பு தெரிவித்த அனுஷ்கா

தமிழ் முன்னணி நடிகைகளில் நடிகை அனுஷ்காவும் ஒருவர் . இவர் அசுரன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில், மலையாள நடிகை மஞ்சு வாரியர் கதாபாத்திரத்தில் நடிக்க மறுத்துவிட்டார். இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், கடந்த அக்.,4ல் ரிலீஸான படம் ‘அசுரன்’. தனுஷ் ஹீரோவாக நடித்த இந்தப் படத்தில், அவரது மனைவியாக மஞ்சு வாரியர் நடித்திருந்தார். இப்படம் பெரும் வெற்றியும் கண்டது .

இப்படம் சாதி பிரச்னை, பஞ்சமி நிலங்கள் குறித்து படமாக்கப்பட்டிருந்தது. சிவசாமி எனும் கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக தனது நடிப்பை வெளிப்படுத்தினார் தனுஷ். படம் வசூலில் சக்கை போடுபோட்டது.

இந்நிலையில், இந்தப் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்வதற்கான முதற்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. நடிகர் தனுஷ் கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் நடிக்கிறார். படத்தை, ஸ்ரீகாந்த் அட்டலா இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தில் மஞ்சு வாரியர் நடித்த கதாபாத்திரத்தில் நடிகை ஸ்ரேயா நடிப்பதாக முதலில் செய்தி வெளியான நிலையில் இப்போது அனுஷ்காவை அணுகியுள்ளனர். ஆனால், அவர் மறுத்துவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

வெற்றி படங்களை தேடி தேடி நடிக்கும் நடிகை ஏன் இப்படத்தை மறுத்தார் என தெரிவியவில்லை .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *