Home / சினிமா / கமலுக்கு நேர்ந்த சோகம் , நாளை ஆபரேஷன்

கமலுக்கு நேர்ந்த சோகம் , நாளை ஆபரேஷன்

தமிழ் முன்னணி நடிகர்களில் ஒருவர்தான் நடிகர் கமல் ஹாசன் . இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்துள்ளாராம் .

அதாவது நடிகரும், மக்கள் நீதி மையம் தலைவருமான கமல்ஹாசன் சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாளை(நவ., 22) அவருக்கு காலில் ஆபரேஷன் நடைபெறுகிறது. இதுபற்றி மக்கள் நீதி மையம் சார்பில் வெளியிட்ட அறிக்கை:

2016ம் ஆண்டு தன் வீட்டு மாடிப்படியிலிருந்து எதிர்பாராதவிதமாக கமல், தவறி விழுந்ததில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அப்போது சிகிக்சை எடுத்த கொண்ட அவருக்கு காலில் டைட்டேனியம் கம்பி ஒன்று வைக்கப்பட்டது.

அரசியல் மற்றும் சினிமாவில் பிஸியாக இருந்ததால் அக்கம்பியை அகற்றவில்லை. தற்போது மருத்துவர்களின் ஆலோசனைப்படி நாளை(அக்.,22) அக்கம்பியை அகற்றும் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. சில நாட்கள் ஓய்விற்கு பிறகு மீண்டும் தன் பணிகளை தொடங்குவார். என அறிக்கை வெளியிட்டுள்ளனர்

கமல் பற்றிய ஆறுதல் செய்தியின் பின்னரே ரசிகர்கள் மனம் ஆறுதலடைந்துள்ளது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *