நடந்து முடிந்த பிக்பாஸில் கலந்துகொண்டு பிரபலமானவர்தான் நடிகை வனிதா . இவர் குடும்ப பிரச்சினைகள் மூலம் ஏற்கனவே பல சர்ச்சைகளில் சிக்கியவர் .இவர் தற்சமயம் யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பிக்கப்போவதாக அறிவித்துள்ளார் .
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த புகழைக் கொண்டு தற்போது தனது இரண்டாவது இன்னிங்சை திரையுலகில் அவர் ஆரம்பித்திருக்கிறார். சின்னத்திரையில் சந்திரலேகா சீரியல் மற்றும் விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றிருக்கிறார். இவருக்காகவே இந் நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் பிரபலமாகின்றது .
இது தவிர புதிதாக யூடியூப் சேனல் ஒன்றையும் அவர் ஆரம்பிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனை சூசகமாக ஒரு டுவீட் மூலம் அவர் ரசிகர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
இந்த சேனல் பயணங்கள் பற்றியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வனிதாவின் புதிய முயற்சிக்கு நெட்டிசன்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.