Home / சினிமா / கவர்ச்சி வேடங்கள் வேண்டாம் , கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நடிகை ராஷி கண்ணா

கவர்ச்சி வேடங்கள் வேண்டாம் , கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நடிகை ராஷி கண்ணா

இமைக்கா நொடிகள், அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன் படங்களில் நடித்தவர் ராஷி கண்ணா. இவரின் நடிப்பு பலரை வெகுவாக கவர்ந்துள்ளது .இந்நிலையில் அவர் சமூக ஆர்வ படங்களில் நடிக்க ஆசை என கூறியுள்ளார் .

தற்போது தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் ‛வோல்டு பேமஸ் லவ்வர்’ உள்பட மூன்று படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களிலும் வழக்கமான நாயகியாகவே நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஒரு ஆங்கில நாளேட்டுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், சமூக பொறுப்புள்ள வேடங்களில் நடிக்க வேண்டும் என்பது தான் எனது எண்ணமாக உள்ளது. அதனால் எதிர்காலத்தில் கதைக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களாக தேர்வு செய்து நடிக்க போகிறேன் என தெரிவித்துள்ளார் .

மேலும் சில இயக்குனர்கள் கவர்ச்சி வேடங்களில் நடிக்க வற்புறுத்தியபோதும் அதை ஏற்க மறுத்து விட்டதாக சொல்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *