Home / சினிமா / விலைக்கு வந்த நடிகை மீனாவின் வீட்டை வாங்கிய நடிகர் சூரி

விலைக்கு வந்த நடிகை மீனாவின் வீட்டை வாங்கிய நடிகர் சூரி

தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்களுள் ஒருவரான சூரி வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் பிரபலமானார். இவர் நடிகை மீனாவின் வீட்டை விலைக்கு வாங்கியுள்ளார் .

இவர் தொடர்ந்து விஜய் அஜித் , சூர்யா போன்ற முன்னணி நாடிகளின் படங்களில் நடித்து கிடு கிடுவென உயர்ந்தார். சூரி வளர்ந்து வந்த நேரத்தில் டாப் காமெடி நடிகராக பார்க்கப்பட்ட சந்தானத்தையே கீழே இறக்கிவிட்டார்.

பின்னர் சினிமாவில் சம்பாதித்த பணத்தை வைத்து பிசினஸ் துவங்க திட்டமிட்ட சூரி மதுரையில் அம்மன் என்ற ஹோட்டலை திறந்திருந்தார். இந்நிலையில் தற்போது நடிகை மீனாவின் வீட்டை சூரி விலைக்கு வாங்கியுள்ளதாக தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

சென்னை சாலிகிராமத்தில் நடிகை மீனாவுக்கு சொந்தமான வீடு ஒன்றை விலைக்கு விற்க திட்டமிட்டிருந்ததை அறிந்த பலர் அந்த வீட்டை வாங்க முன்வந்தனர். ஆனால் எல்லாரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு நடிகர் சூரி இந்த வீட்டை ரூ. 6.5 கோடிக்கு வங்கியுள்ளாராம்.

சினிமாவில் நுழைந்த ஒரு சில வருடத்திலே நடிகை மீனாவின் வீட்டை வாங்கும் அளவிற்கு உயர்ந்துள்ள சூரியின் வளர்ச்சியை கண்டு கோலிவுட் வாய்பிளந்து வருகிறது. இத்தனைக்கும் அவர் நடிப்பு திறனே காரணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *