சூப்பர்ஸ்டார் படமென்றாலே ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டம்தான். இந்நிலையில் ரஜினியின் பிறந்தநாளை கொண்டாட உள்ள ரசிகர்களுக்கு நடிகர் ரஜனி வேறு ஒரு அசத்தல் விருந்தும் கொடுக்கவுள்ளாராம் .
ரஜினிகாந்த் ரசிகர்கள் தற்போது செம்ம சந்தோஷத்தில் உள்ளனர். ஏற்கனவே கட்சி தொடங்கும் வேலை, பொங்கலுக்கு தர்பார் படம் ரிலிஸ் என கொண்டாட்டம் தான்.
அப்படியிருக்க இன்னும் சில தினங்களில் ரஜினியின் பிறந்தநாள் வருவதாக் ரசிகர்கள் அதையும் சேர்த்துக்கொண்டாட தயாராகி வருகின்றனர். நடிகர் ரஜனியின் பிறந்தநாளில் ரஜனியை விட ரசிகர்களே அதிகம் ஆர்வத்துடன் இருப்பர் என்பது எல்லோரும் அறிந்ததே .
இந்நிலையில் ரஜினியின் பிறந்தநாள் ஸ்பெஷலாக ட்ஜிட்டர் செய்யப்பட்ட மெகா ஹிட் படமான பாட்ஷா மீண்டும் ரீரிலிஸ் ஆகவுள்ளதாம்.