Home / சினிமா / 90 வயது கமலுக்கு தோழியாக 85 வயது கதாபாத்திரத்தில் பிரியா பவானி ஷங்கர்

90 வயது கமலுக்கு தோழியாக 85 வயது கதாபாத்திரத்தில் பிரியா பவானி ஷங்கர்

இந்தியன் 2-வில் பிரியா பவானி சங்கர்

ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. கமலின் பட அப்டேட்டுக்கே ஒரு கூட்டம் உண்டு .பிரம்மாண்டமான இயக்குனர் ஷங்கர் இயக்கும் 14வது படம் இது.

பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனம் தாயாரிக்கும் இப்படம் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்தே பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.கமல், காஜல் அகர்வால், சித்தார்த், பிரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா, வெண்ணிலா கிஷோர், ரகுல் ப்ரீத் சிங் என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துவரும் இப்படத்தின் அடிக்கடி செய்திகள் வெளிவந்தவண்ணம் இருக்கிறது.

இப்படத்தில் 90 வயது கமலுக்கு மனைவியாக காஜல் அகர்வால் நடிக்கிறார் என்ற தகவல் வெளிவந்திருந்தது. இந்த படத்தில் இவர்களின் இணைவு சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது .

இந்நிலையில் தற்போது, 90 வயது கமலுக்கு தோழியாக 85 வயது கதாபாத்திரத்தில் பிரியா பவானி ஷங்கர் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியவந்துள்ளது. எனவே கூடிய விரைவில் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *