நடிகர் விஜய்க்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரியவேண்டியதில்லை. இவர் படமென்றாலே பட்டிதொட்டி எங்கும் கொண்டாட்டம்தான் .தற்சமயம் நம்ம இளைய தளபதி விஜயின் மெழுகுசிலை உருவாக்கப்பட்டுள்ளது .
சமீபத்தில் வெளியான அவரது பிகில் படம் உலகம் முழுவதும் 300 கோடி ரூபாய்க்கும் அதிகம் வசூலித்து சாதனை செய்துள்ளது.
இந்நிலையில் விஜய்க்கு கன்னியாகுமரியில் உள்ள ஒரு மியூசியத்தில் ஒரு மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது.
அது அச்சு அசல் விஜய் போலவே இருக்கிறது என ரசிகர்கள் கூறுகின்றனர். அதனுடன் பலரும் நின்று போட்டோவும் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். இனி நடிகர் விஜயை பார்த்து செல்பி எடுக்கணும் எண்டு ஆசையா .இனி இந்த தளபதி சிலை போதும்