Home / சினிமா / அதிகமாக பில்டப் கொடுக்கும் நடிகை பிரியா ஆனந்த்

அதிகமாக பில்டப் கொடுக்கும் நடிகை பிரியா ஆனந்த்

கிரிசாயா இயக்கத்தில், த்ருவ் விக்ரம், பனிதா சாந்து நாயகன் நாயகியாக நடிக்க நேற்று வெளிவந்த படம் ‘ஆதித்ய வர்மா’. இந்த படம் சக்கைபோடு போட்டு வருகின்றது .

இந்தப் படத்தின் பிரமோஷனுக்காக படத்தின் நாயகி பனிதா சாந்துவை விட நடிகை பிரியா ஆனந்த் கேரளா, கர்நாடகா என சென்று அதிகமாக பில்ட்அப் கொடுத்து பேசினார். இவரும் நடிக்கின்றார் ஆனால் இவர் கீரோயின் போல் பேசிவருகின்றாராம் .

படத்தில் அவரும் இரண்டாவது கதாநாயகியாக நடித்திருப்பார் போலிருக்கிறது, அதனால்தான் இப்படி பிரமோஷனில் கலந்து கொண்டுள்ளார் என்று ரசிகர்களும் நினைத்திருப்பார்கள். ஆனால், படத்தைப் பார்த்த பிறகு பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. பிரியா ஆனந்த் ஓரிரு காட்சிகளில் மட்டுமே நடித்திருக்கிறார்.ஒரு சில காட்சிகளுக்கே இவ்வளவு சீனா .

அவர் நடித்திருக்கும் சினிமா நடிகை கதாபாத்திரம் சினிமா பிரபலங்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஒரு நடிகை கதாபாத்திரத்தை இந்த அளவிற்கு கீழ்த்தரமாகக் காட்ட வேண்டிய அவசியம் படத்தில் இல்லை. அவரது கதாபாத்திரத்தால் படத்திற்கு எந்தவிதமான பிளஸ்ஸும் இல்லை என்பது ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *