நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்துகொண்டு ரசிகர்களின் மனதை மட்டுமல்லாமல் டைட்டிலையையும் தட்டி கொண்டவர்தான் முகேன் . இவரை ரசிகர்கள் தற்சமயம் வெறுக்க ஆரம்பித்துவிட்டார்களாம் .விஜய் டிவி செய்த வேலையாலே இந்நிலை அவருக்கு ஏற்பட்டுள்ளதாம் .
இதுவரை முகேனை கொண்டாடி வந்த ரசிகர்கள் தற்போது விஜய் டிவி செய்த செயலால் வெறுக்க தொடங்கியுள்ளனர். அப்படியென்ன சாதிச்சிட்டாரு எனவும் கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளனர்.
அதாவது விஜய் டிவி முகேன் பிக் பாஸ் டைட்டிலை வென்றதை வைத்து முகேனின் சாதனை பயணம் என ஒரு நிகழ்ச்சியை உருவாக்கியுள்ளது.
இதனை பார்த்த ரசிகர்கள் பிக் பாஸில் ஜெயித்தததற்காக சாதனை பயணமா? முகேன் மட்டுமில்லாமல் வேற யார் மலேசியாவில் இருந்து வந்திருந்தாலும் டைட்டில் அவர்களுக்கு தான் கொடுத்து இருப்பீர்கள், அது வியாபார யுக்தி என விஜய் டிவியை விளாசி வருகின்றனர்.ஒருவருடைய திறமைக்கு மட்டுமே எண்கள் கைகள் ஓங்கும் உங்கள் டிவி நிகழ்ச்சிக்கு அல்ல எனவும் திட்டி தீர்க்கின்றனராம் .
இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஏன் ஒத்து கொள்கிறீர்கள் என முகேனையும் விமர்சனம் செய்து வருகின்றனர்.