‘மீடூ’ விவகாரம் விஸ்வரூபமெடுத்த பிறகு இந்தியத் திரையுலகில் சிலபல நடிகைகள் தங்களுக்கு ஏற்பட்ட மோசமான சில அனுபவங்களை வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் தெரிவித்தார்கள். அவர்கள் தங்களுக்கு நடந்த சோகமான நிகழ்வுகளை எதோ ஒரு வழியில் வெளியுலகுக்கு கொண்டுவருகின்றனர் .
தெலுங்கு நடிகையான ஸ்ரீரெட்டி இந்த விவகாரத்தில் அடிக்கடி பரபரப்பு ஏற்படுத்துவார். அவர் தனக்கு நடந்த எல்லாவற்றையும் ஒன்றன்பின் ஒன்றாக வெளிப்படுத்துகின்றார் .
தமிழ், தெலுங்கில் நாயகியாக இருக்கும் ரகுல் ப்ரீத் சிங் பற்றி கூட அவர் சில தகவல்களைத் தெரிவித்திருந்தார். ஆனால், தனக்கு அப்படியான மோசமான அனுபவங்கள் வந்ததில்லை என ரகுல் கூறியிருந்தார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னை படுக்கைக்கு அழைத்த ஹீரோ பற்றிய தகவலைத் தெரிவித்துள்ளார். ஆனால், அந்த ஹீரோ யார் என்பதை அவர் சொல்லவில்லை. தன்னுடன் படுக்கையைப் பகிர வேண்டுமென அந்த ஹீரோ டீசன்ட்டாகக் கேட்டதாகவும், தனக்கு அதில் விருப்பமில்லை என்று தெரிவித்துவிட்டதாகவும் கூறியுள்ளார். முதலில் அப்படியான அணுகுமுறை குறித்து மறுப்பு தெரிவித்த ரகுல், தற்போது அது பற்றி கூறியிருப்பது ஆச்சரியப்பட வைத்துள்ளது என்கிறார்கள்.