Home / சினிமா / இது ஒரு மாதிரியான படம் : எஸ்.ஏ.சந்திரசேகர் படம் குறித்து பரவும் பதற்றம்

இது ஒரு மாதிரியான படம் : எஸ்.ஏ.சந்திரசேகர் படம் குறித்து பரவும் பதற்றம்

இளைய தளபதி விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் ஜெய் – அதுல்யா ரவி ஜோடியாக நடிக்கும் படம், கேப்மாரி. இப்பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய, படத்தின் ஒளிப்பதிவாளர் எம்.ஜீவன், ”படத்தின் போஸ்டர்களை பார்த்தால், இது ஒரு மாதிரியான படமோ என தோன்றும். என கூறியுள்ளார் .

மேலும் அப்படி ஏமாற்றி, திரையரங்கத்துக்கு அழைத்து வருவோம். ஆனால், படத்தில் நல்ல விஷயத்தை தான் சொல்லியிருக்கிறோம்,” என்றார். சந்திரசேகரின் படமென்றாலே கருத்துக்கள் புதைந்துகிடங்கும் என்பது எல்லோருக்கும் தெரியும் .

தொடர்ந்தும் பேசிக்கொண்டு இருக்கையில் உடனே குறுக்கிட்ட, இயக்குனர்எஸ்.ஏ.சந்திரசேகர், ”போஸ்டர்களில்உள்ள அத்தனை காட்சிகளும் படத்தில் உண்டு. ஆனால், சொல்ல வேண்டிய விதத்தில் சொல்லியிருக்கிறோம்; ரசிகர்களை ஏமாற்றவில்லை,” என்றார்.

இப்படத்தில் இவர்களின் உழைப்பு எப்படி இருக்கின்றது என்று பொறுத்திருந்து பார்ப்போம் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *