மறைந்த முதல் ஜெயலலிதாவின் வழக்கை வரலாறு “தலைவி” பெயரில் உருவாகி வருகிறது. இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் பாலிவுட்டின் மிகச்சிறந்த நடிகைகள் ஒருவரான கங்கனா ரனாவத் நடித்து வருகிறார். இந்த படத்தை ஏ.எல் விஜய் இயக்கி வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் வெளியாகி கிண்டலுக்கு உள்ளானது. தொடர்ந்தும் ஜெயலலிதா வேடத்துக்கு நான் பொருத்தமாக இருப்பேன் என நடிகை நித்யா மேனனும் பேட்டியளித்துள்ளார்.
இந்நிலையில், த அயன் லேடி என்ற பெயரிலும் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு சினிமா படமாக தயாராகிறது. இந்த படத்தை இயக்குனர் பிரியதர்ஷினி இயக்க ஜெயலலிதாவாக நித்யா மேனன் நடித்து வருகிறார். இது குறித்து நித்யா மேனன் பேசியதாவது,
ஜெயலலிதாவுக்கும் எனக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. நாங்கள் இருவருமே பெங்களூருவில் படித்து இருக்கிறோம். என தங்கள் ஒற்றுமையை முதலில் கூறினார் .தொடர்ந்தும் பழக்க வழக்கம், பேசும் விதம், ஒழுக்கம், மேனரிசம் போன்ற விஷயங்களில் எல்லாம் ஜெயலலிதாவுக்கும் எனக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன என தெரிவித்தார் .
ஜெயலலிதா வேடத்துக்கு நான் பொருத்தமாக இருப்பேன் என பேசியுள்ளார். இந்நிலையில் ஜெயலலிதாவின் கதாபாத்திரத்திற்கு பொருந்துவார் என்பதே பலரின் கருத்தாக உள்ளது.