Home / சினிமா / நடிகர் அஜித்துக்கு பொறுப்பில்லை , கோபத்தில் இயக்குனர்

நடிகர் அஜித்துக்கு பொறுப்பில்லை , கோபத்தில் இயக்குனர்

அல்டிமேட் ஸ்டார் தல அஜித் நேர்கொண்ட பார்வை பட வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஹெச்.வினோத் – போனி கபூர் கூட்டணியில் “வலிமை” படத்தில் நடிக்கிறார். போலீஸ் அதிகாரியாக அஜித் நடிகின்றார் . இவரின் தற்போதைய செயற்பாடு குறித்து இயக்குனர் கோவத்தில் உள்ளாராம் .

அதாவது நடிகர் அஜித் தனது வலிமை பட கெட்டப்பை கசியவிட்டு வருகின்றாராம் .இதனால் இயக்குனர் உச்சகட்ட கோபத்தில் உள்ளாராம் .

அண்மையில் இப்படத்தின் பூஜை போடப்பட்டது. மேலும் , நவம்பர் முதல் வாரத்திலே வலிமை படப்பிடிப்பு டெல்லியில் தொடங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்தது. அதனை உறுதிசெய்யப்படும் வகையில் அஜித் தாடியை முழுவதும் எடுத்துவிட்டு மீசையை இறக்கி விட்டு கொஞ்சம் நடுத்தரமான வயது தோற்றத்திலும்… போலீஸ் கெட்டப்பில் தோற்றமளித்திருந்தார். அதை பார்த்த ரசிகர்கள் பலரும் வலிமை படத்தில் அஜித் இரண்டு கெட்டப்பில் நடிக்கிறார் எனவும் கூறி வந்தனர்.

அதாவது அஜித் வலிமை பட கெட்டப்பில் ஏர்போர்ட்களில் வரும் போதும் போகும்போது ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்து தனது கெட்டப்பை கசிய விடுகிறாராம். இதனாலே வளர்ந்து வரும் படத்தின் இயக்குனர் எச். வினோத் இதை எப்படி அவரிடம் சொல்வது என்ற சங்கடத்தில் இருந்து வருகிறாராம். இதுவரை அஜித்திற்கு மூன்று கெட்டப் போடப்பட்டு அது அத்தனையும் லீக்காகி விட்டது. எனவே இதில் அஜித் இரண்டு ரோல் நடிக்கிறார் என்று கூறப்பட்டதெல்லாம் ரசிகர்களின் யூகம் மட்டுமே என்பது தற்போது தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *