நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து மெகா ஹிட் ஆனது வார் படம். அது 450 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து மிக பிரம்மாண்ட சாதனை படைத்தது.
இவருடைய படம் என்றாலே இளைஞர்களை விட பெண்கள்தான் அதிகம் பார்ப்பார் . காரணம் அவரின் அழகும் ,நடிப்பின் ஸ்டைலும்தான் காரணம் .
இந்நிலையில் வார் படத்திற்காக ஹ்ரித்திக் ரோஷன் வாங்கிய சம்பளத்தின் விவரம் தற்போது வெளிவந்துள்ளது. மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரான இந்த படத்திற்க்கு 48 கோடி ருபாய் சம்பளமாக ஹிரித்திக் ரோஷன் வாங்கினாராம். ஆச்சரியப்படத்தான் வேண்டும் இருந்தாலும் 450 கோடி வசூல் படத்திற்கு 48 கோடி பரவாயில்லை .
தன்னுடைய அடுத்த படத்திற்கு தன்னுடைய சம்பளத்தை மேலும் உயர்த்தியுள்ளாராம் அவர். அது தயாரிப்பாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இனி இவரை வைத்து படமெடுப்பதென்றாலே அதிகமாக சிந்திக்கும் தயாரிப்பாளர்கள் .