Home / சினிமா / ‘ விஜய் 64 ‘ படத்துக்கு வந்த புதிய சிக்கல் ,அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்

‘ விஜய் 64 ‘ படத்துக்கு வந்த புதிய சிக்கல் ,அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்

இளைய தளபதி விஜய் படமென்றாலே ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டம்தான். இவரின் படத்துக்கு எதிர்பார்ப்பு மிகவும் அதிகம் .

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 64வது படத்தின் படப்பிடிப்பு டில்லியில் சில வாரங்களாக நடைபெற்று வரும் நிலையில், இன்னும் சில தினங்களில் படப்பிடிப்பு முடிந்து, அங்கும் இப்படத்துக்கு இயற்க்கை எதிராக இருந்தது குறிப்பிடத்தக்கது .அங்கிருந்து சென்னைக்கு திரும்புகிறார்கள். அதன்பிறகு தொடர்ந்து சென்னையில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

இந்தநேரத்தில், விஜய் 64வது படத்தின் ஒரு பாடலை கம்போஸ் செய்து விட்டார் அனிருத். சம்பவம் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த பாடலின் சிங்கிள் டிராக்கை விரைவில் வெளியிடயிருப்பதாக செய்தி வெளியானது.
ஆனால் அது உண்மையில்லை என்று படக்குழு மறுத்துள்ளது.

அதோடு, விஜய் 64வது படம் குறித்து சம்பந்தப்பட்டவர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடாத தகவல்களை ரசிகர்கள் யாரும் நம்ப வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது. விஜய் படத்துக்கு இப்படி சிக்கல் வருவதொன்றும் புதிதல்ல எனவும் படக்குழு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *