‛பேட்ட படத்திற்கு பின் ரஜினி நடிப்பில் வெளியாகும் படம் ‛தர்பார். முருகதாஸ் இயக்க, நயன்தாரா, யோகி பாபு, நிவேதா தாமஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் முதல் பாடலை வெளியிட்டுள்ளனர். ‛சும்மா கிழி கிழி என்ற பெயரில் வெளியாகி உள்ள இப்பாடலை விவேக் எழுத, எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியிருக்கிறார்.
“நான் தாண்டா இனிமேலு, வந்து நின்னா தர்பாரு, உன்னோட கேங், என்னோட லீடு, பில்லா என் வரலாறு, பாத்தவன் நான் பலபேரு. உன்னோட பேட்டைக்கும் நான் தாண்டா லார்டு….” என்ற அந்தப்பாடல் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இப்பாடல் ரஜினியின் அடுத்தக்கட்ட பயணமான அரசியலையும் இப்பாட்டில் வெளிப்படுத்தி உள்ளனர்.
அதை குறிக்கும் விதமாக தான் பாடலின் முதல் வரியே “நான் தாண்டா இனிமேலு, வந்து நின்னா தர்பாரு என பாடல் வரி அமைத்துள்ளனர்.இப்பாடல் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது . இவர் அரசியல் வந்தால் எல்லாம் நான்தான் என்பதுபோல் அமைந்துள்ளது .