Home / சினிமா / விமர்சனங்களால் விழுந்துபோகாத , தலைவி பட கீரோயின்

விமர்சனங்களால் விழுந்துபோகாத , தலைவி பட கீரோயின்

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடிக்கும் படம் ‛தலைவி’. இவரின் தலைவி கெட்டப்புக்கு கலவை விமர்சனங்களே வந்தன , மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகும் இந்த படத்திற்காக பரதநாட்டியம், தமிழ் கற்று நடித்து வருகிறார் கங்கனா. இப்படத்தில் நடிக்க தன்னை முழுதும் அர்பணித்துள்ளார் அவர் .

சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியானபோது, கங்கனாவின் முகத்திலும், தோற்றத்திலும் ஜெயலலிதாவின் சாயல் இல்லை என்ற விமர்சனங்களே அதிகம் எழுந்தது .

இருப்பினும் தலைவி படக்குழு மனம் தளரவில்லை. நடிகையும் சலிக்கவில்லை ,படப்பிடிப்பில் மும்முரமாய் உள்ளனர். குறிப்பாக படத்தின் ரிசல்ட், பர்ஸ்ட் லுக் போஸ்டர் தொடர்பான விமர்சனங்களை முறியடிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்பதற்காக கடினமாக உழைக்கிறார்களாம்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் தலைவி படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். இப்படத்தில் அரவிந்த்சாமி , பிரகாஷ்ராஜ் போன்றோரும் நடிக்கின்றனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *