Home / சினிமா / விஜய்க்கு என்னால் கதை எழுத முடியாது , பிரபல இயக்குனர் கௌதம் மேனன் தெரிவிப்பு

விஜய்க்கு என்னால் கதை எழுத முடியாது , பிரபல இயக்குனர் கௌதம் மேனன் தெரிவிப்பு

விஜயின் படமென்றாலே அது வெற்றி கொண்டாட்டம்தான் . நடிகர் விஜயின் சம்மதத்துக்கென்றே பல இயக்குனர்கள் போட்டி போடுகின்றனர் , நடிகர் விஜய் தலை அசைத்தால் அவருக்கென மாஸ் வசனங்கள் கொண்ட கதை எழுத பல இயக்குனர்கள் காத்திருக்கின்றனர் . இந்நிலையில் நடிகர் விஜய்க்கென என்னால் கதையெழுத முடியாது என இயக்குனர் கௌதம் மேனன் கூறியுள்ளார் .

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் என்னுடைய கதைக்குத்தான் விஜய் பொருத்தமாக இருக்க வேண்டுமே தவிர விஜய்க்காக ஒரு மாஸ் கதையை என்னால் எழுத முடியாது என்று கூறியுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் விஜய் நடிப்பில் கவுதம் மேனன் இயக்குவதாக இருந்த ’யோஹான் அத்தியாயம் ஒன்று’ என்ற திரைப்படம் திடீரென டிராப் செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் மீண்டும் விஜய் படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நான் எழுதிய மாஸ் கதைக்கு விஜய் பொருத்தமாக இருக்க வேண்டுமே தவிர அவருக்காக நான் வலுக்கட்டாயமாக ஒரு மாஸ் கதை எழுதுவதில் உடன்பாடில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் இதுவரை விஜய்க்கு என்னால் கதை எழுத முடியவில்லை என்றும் இனிமேல் எழுத வாய்ப்பு இருந்தால் கண்டிப்பாக எழுதுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இவரின் கருத்தால் விஜயின் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *