Home / சினிமா / ‘ பிகிலும் ‘ ஐடாவும் ‘ ஒன்றா ? நடிகர் கதிர் கூறிய தகவல்

‘ பிகிலும் ‘ ஐடாவும் ‘ ஒன்றா ? நடிகர் கதிர் கூறிய தகவல்

நடிகர் கதிர் பல நல்ல படங்களில் கீரோவாக அல்லது துணை நடிகராக நடித்துவருகின்றார் . இவர் ஐடா படத்தில் நடித்துள்ளார் , இப்படம் குறித்து பேசிய அவர் பிகில் வேறு ஐடா வேறு , இவை இரண்டையும் இணைக்காதீர்கள் என கோரியுள்ளார் .

குமரன் இயக்கத்தில், கதிர், ரோஷினி பிரகாஷ், சுவாஸ்திகா, யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்கும் ஜடா படத்தின் இசை வெளியீட்டு விழா, சமீபத்தில் நடந்தது.இதில் பல நடிகை நடிகர்கள் கலந்துகொண்டனர் .

இப்படம் குறித்து பேசிய கதிர், ”இப்படம், கால்பந்து போட்டிகளை அடிப்படையாக கொண்டது தான். பிகில் படத்தில், சர்வதேச கால்பந்து போட்டி குறித்து காட்டப்பட்டது. ஜடாவில், உள்ளூர் கால்பந்து போட்டி குறித்து சொல்லியுள்ளோம்.

உள்ளூர் போட்டிகளில், எதிரணியை தாக்குவர்; இப்போட்டிகளை வைத்து சூத்தாட்டங்களும் நடக்கும். சர்வதேச போட்டிகளில் கலந்துகொள்ளும் தகுதி உள்ள இளைஞர்கள், உள்ளூர் போட்டிகளுடனே முடங்கிப் போய்விடுவது ஏன் என்பதை சொல்லும் படம் இது. பிகில் வேறு; ஜடா வேறு,” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *