நடிகர் ஹரிஷ் கல்யாண் பிக்பாஸ் ஷோவில் பங்கேற்றபிறகு தொடர்ந்து ஹிட் படங்கள் கொடுத்து வருகிறார். அவர் அடுத்து நடித்துள்ள தனுசு ராசி நேயர்களே படமும் விரைவில் ரிலீஸ் ஆகிறது. பிக் பாஸிலே பல ரசிகர்களை சம்பாதித்து கொண்டவர்தான் அவர் .
இந்நிலையில் அடுத்து ஹரிஷ் கல்யாண் ஒரு தெலுங்கு படத்தின் ரீமேக்கில் நடிக்கவுள்ளார். தெலுங்கில் சூப்பர்ஹிட் ஆன பெல்லி சூப்புலு என்ற படத்தின் கதை தான் அது. இந்த படத்திலும் அவரின் நடிப்பு சிறப்பாக இருக்கும் என தெரிகின்றது .
அதில் முதலில் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் தமன்னா ஆகியோர் நடிக்கவிருந்தனர். ஆனால் தற்போது அந்த கதை ஹரிஷ் கல்யாண் வசம் வந்துள்ளது.
ஹரிஷ் கல்யாணின் நண்பர் கார்த்திக் என்பவர் தான் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகிறார்.