ஜுமான்ஜி என்கிற விளையாட்டு புத்தத்திற்குள் நுழைந்தால் அது கொடுக்கும் டாஸ்க்குகளை வென்று திரும்ப வேண்டும். மெக்கேனா எழுதிய கதையை அடிப்படையாகக் கொண்ட கதை.இது குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் மிகவும் பிடித்த விளையாட்டு.
1995ல் இதன் முதல் பாகம் வெளிவந்தது. சிறுவர்கள் விளையாட்டாக தொடங்கிய இந்தப் படம் மூன்றாவது பாகமான வெல்கம் டு தி ஜங்கிள் பாகத்திலிருந்து பெரியவர்களுக்கான படமாக மாறியது. இப்போது இதன் 4ம் பாகம் ஜுமான்ஜி தி நெக்ஸ்ட் லெவல் என்ற பெயரில் வெளிவருகிறது. மிகவும் சுவாரஸ்யமானதும் கூட .
எல்லோரின் மனதில் பெரும் இடம்பிடித்த இந்த படத்தின் 3வது பாகத்தை இயக்கிய ஜேக் கஸ்டன் இதனையும் இயக்கி உள்ளார்.
கொலம்பியா பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை சோனி பிக்சர்ஸ் வெளியிடுகிறது. வருகிற டிசம்பர் 13ந் தேதி வெளிவருகிறது. இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளிவருகிறது.