Home / சினிமா / பெண்கள் குறித்து கருத்து , பாக்கியராஜிற்கு ஆண்கள் ஆதரவு

பெண்கள் குறித்து கருத்து , பாக்கியராஜிற்கு ஆண்கள் ஆதரவு

சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ‛கருத்துக்களை பதிவு செய்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் பாக்யராஜ். பெண்கள் பற்றி சில கருத்துக்களை கூறினார் .அதாவது பொள்ளாச்சி பாலியல் கொடூரம் பற்றி சில கருத்துக்களை பதிவு செய்தார் .

குற்றம் ஆண்களில் மட்டுமல்ல பெண்களிலும் உண்டு .அதாவது ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாது என பாக்யராஜ் கூறியதற்கு கண்டனம் தெரிவித்து பெண்கள் அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தின. இவரின் இந்த கருத்தால் பெரும் சிக்கலில் உள்ளார் அவர் .

ஆனாலும் இவரின் கருத்துக்கு ஆதரவாக ஆண்கள் பாதுகாப்பு சங்கம் களத்தில் இறங்கியுள்ளது. இதுகுறித்து அச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெண்கள் எச்சரிக்கையாக இருந்தால் தவறுகள் நடக்காது என்று மனதில் பட்டதை பேசுவதோடு நில்லாமல் சமுதாய நலன் சார்ந்து பெண்களை சுயகட்டுப்பாடுடன் இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறியது. மிகவும் பாராட்டத்தக்கது. மட்டுமல்லாமல் துணிச்சலான கருத்தும் ஆகும்” என பாக்யராஜை பாராட்டியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *