தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர்தான் நடிகை அனுஷ்கா . இவர் பல முன்னணி கீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார் .
தெலுங்கில் வெளிவந்த ‘பாகமதி’ படத்திற்குப் பின் இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு அனுஷ்கா நடித்து 2020, ஜனவரி 31ல் வெளிவர உள்ள படம் ‘நிசப்தம்’.
இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது .தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இப்படத்தை வெளியிட உள்ளார்கள். மாதவன், அஞ்சலி, ஷாலினி பான்டே, ஹாலிவுட் நடிகர் மைக்கேல் மேட்சன் மற்றும் பலர் நடிக்கும் படம் இது.
இப்படத்தில் வாய் பேச முடியாதவராக நடிக்கிறார் அனுஷ்கா. அதற்காக ‘சைகை’ மொழியை மூன்று மாதங்கள் கற்றுக் கொண்ட பிறகுதான் படத்தில் நடிக்க வந்தாராம். நேற்றைய நிகழ்வில் அனுஷ்கா கலந்து கொள்ளவில்லை.