Home / சினிமா / ஜெயலலிதாவின் தோற்றத்தில் ரம்யா கிருஷ்ணன்

ஜெயலலிதாவின் தோற்றத்தில் ரம்யா கிருஷ்ணன்

மறைந்த தமிழ முதலவர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து படம் இயக்க கோலிவுட்டில் இருக்கும் பல இயக்குனர்கள் போட்டிபோடுகின்றனர் . இதற்கென பல பெண்களை தேர்வுசெய்ததில் ஒருவராக நடிகை கங்கனா ரனாவத்தை வைத்து ஜெயலலிதா பையோ பிக்கை இயக்கி வருகிறார்.

அண்மையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி நெட்டிசன்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் இரையானது. ஆனால் இதை அவர் பொருட்படுத்தவில்லை .இதே போல் இயக்குனர் கெளதம் மேனன் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வெப் சீரிஸாக இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் ஜெயலலிதா வேடத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் தற்போது ஜெயலலிதாவின் தோற்றத்தில் இருக்கும் ரம்யா கிருஷ்ணனின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை கண்ட நெட்டிசன்ஸ் இந்த கேரக்டருக்கு நீங்க எவ்வளவோ மேல். கங்கனாவுக்கு பதிலாக நீங்களே தலைவி படத்தில் நடித்திருக்கலாம் என கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

யார் யாருக்கு கதாப்பாத்திரம் பொருந்துமோ அவரே அதில் நடிக்கலாம் என்பதற்கும் ரசிகர்கள் மனதில் அவருக்கே இடமுண்டு என்பதும் இதிலிருந்து தெளிவாகின்றது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *