Home / சினிமா / மேக்கப் இல்லாமலே ரசிகர்களை கவர்ந்த நடிகை நயன்தாரா

மேக்கப் இல்லாமலே ரசிகர்களை கவர்ந்த நடிகை நயன்தாரா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர்தான் நடிகை நயன்தாரா . இவர் பல பிரபலமான நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார் .சமீப காலமாக இவரது வளர்ச்சி அபரிவிதமாகிவிட்டது. தமிழ் சினிமாவில் பாலிவுட் ஹீரோயின்களுக்கு இணையாக சம்பளம் வாங்கும் ஒரே நடிகை நயன்தாரா மட்டும் தான்.

தனது மார்க்கெட்டை எவராலும் தொட்டுபாக்கவே முடியாத நிலையில் தக்கவைத்து வருகிறார். 15 வருடங்களுக்கு மேல் சினிமாவில் சிறந்து விளங்கி வரும் நயன்தாரா விக்னேஷ் சிவனுடன் காதல் வயப்பட்டு அடிக்கடி அவுட்டிங் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்நிலையில் தற்போது நயன்தாரா ஏர்போர்ட்டில் மேக்கப் இல்லாமல் சிம்பிளாக எடுத்துக்கொண்ட புகைப்படமொன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் “Random click” என குறிப்பிட்டு வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை கண்ட அவரது ரசிகர்கள் தலைவி மேக்கப் போடலனாலும் செம்ம அழகு என ஆளாளுக்கு வர்ணித்து வருகின்றனர். அதாவது அவர் நடிப்பின் சிறப்பு ஒருபுறம் இருக்க அவரது அழகும் அதிகமாக பேசப்படும் ஒன்றாக உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *