Home / சினிமா / என்னை அந்தமாதிரி படங்களில் நடிக்க அழைத்தார்கள் , பிரபல நடிகை ஓபன் டோக்

என்னை அந்தமாதிரி படங்களில் நடிக்க அழைத்தார்கள் , பிரபல நடிகை ஓபன் டோக்

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராதிகா ஆப்தே. இவர் பல முன்னணி கீரோக்களுடன் நடித்துள்ளார் . இவர் ஏராளமான இந்தி படங்களில் நடித்துள்ளார். தமிழில் நடிகர் கார்த்தியின் ‘அழகுராஜா’ படத்தில் அறிமுகமானார். ரஜினிக்கு ஜோடியாக ‘கபாலி’ படத்தில் நடித்தது மட்டுமல்லாமல் பலரின் மனதையும் கவர்ந்தார் .

இந்நிலையில் ’வீ தி வுமன் பேனலில்’ எந்த மாதிரியான படங்களை நீங்கள் நிராகரிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு சிரித்துக்கொண்டே.. அவர் வியக்கத்தக்க பதிலை கூறினார் . அதாவது நகைச்சுவை படம் மற்றும் ஆபாச படங்களை நிராகரிப்பேன் என கூறியுள்ளார் .

காரணம் நான் கவர்ச்சியான காட்சிகளில் நடித்தேன். அதனால் பாலியல் நகைச்சுவை படங்களில் என்னை நடிக்க வைக்க பெரும்பாலான தயாரிப்பாளர்கள் முயற்சித்தார்கள். ஒரு துறையில் கால் வைத்தால் அதேதான் வழியென்பது இல்லை ஆனால் அந்த பாதைக்கே என்னை அழைத்தார்கள் .

மேலும், “முற்போக்கான” எழுத்து என்ற பெயரில் எதையும் எளிதாக எழுதிவிடுகிறார்கள். அதனால் நான் அந்த மாதிரியான படங்களை நிராகரித்து விடுவேன் என வெளிப்படையாக கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *