பல நடிகைகளுடன் கிசு கிசு செய்திகளில் சிக்கியவர்தான் சாமியார் நித்தியானந்தா அதாவது பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு ஆளாகியுள்ள திருவண்ணாமலையைச் சேர்ந்த சாமியார் நித்யானந்தா இந்தியாவிலிருந்து தப்பி, தென் அமெரிக்க நாடான ஈக்வடார் அருகில் தனித் தீவு ஒன்றை வாங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
அந்தத் தீவை ‘கைலாசா’ என்ற தனி நாடாக அவர் உருவாக்கி உள்ளதாகவும் பரபரப்பாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. தனது மடத்தை அவர் அங்கு தொடங்கவும் வாய்ப்பு உண்டு .
நடிகர் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பரான நடிகர் மோகன் பாபுவின் மகன் நடிகர் மஞ்சு மனோஜ், நித்யானந்தா குறித்து ஒரு டுவீட் போட்டுள்ளார்.
அதில், “என்னது, இந்த முட்டாள் அவருக்கென சொந்த தீவு வாங்கியுள்ளாரா. அன்பார்ந்த அரசாங்கமே, இந்த தீவை உடனே பாம் வைத்து அழியுங்கள்,” எனக் கூறி அதற்கு ரசிகர்களின் கருத்துக்களையும் கேட்டுள்ளார். காரணம் இவரை ஒரு சிலர் சாமியாராக நினைத்தாலும் , இன்னொரு புறம் இவரை பற்றி பல தவறான கருத்துக்களும் உண்டு .