Home / சினிமா / சின்னத்திரையை வென்று பெரியதிரையில் கால்பதித்த நடிகை

சின்னத்திரையை வென்று பெரியதிரையில் கால்பதித்த நடிகை

இந்தி தொலைக்காட்சி தொடர்களின் நட்சத்திர நாயகி டிகன்கனா சூர்யவன்ஷி. 7 வருடங்களுக்கு முன்பு குழந்தை நட்சத்திரமாக இந்தி தொடர்களில் நடித்தார். அதன்பிறகு சகுந்தலா, பலிக்கா வேது, உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்தார். இந்தி பிக்பாஸ் 9வது சீசனிலும் பங்கேற்றார். இந்நிலையில் சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு கதாநாயகியாக வந்துள்ளார் அவர் .

கடந்த ஆண்டு பிரைடே படத்தின் மூலம் பாலிவுட் நடிகை ஆனார். அதன் பிறகு ஜிலேபி, ரங்கீலா ராஜா படங்களில் நடித்தவர் ஹிப்பி படத்தின் மூலம் தெலுங்கிற்கு வந்தார். தற்போது தனுஷ் ராசி நேயர்களே படத்தின் மூலம் தமிழுக்கு வந்திருக்கிறார். தமிழில் பல வெற்றி படங்களை கொடுப்பார் என நம்பப்படுகின்றது .

இப்படம் குறித்து அவரிடம் வினவிய பொது , அவர் என்ன கூறினார் தெரியுமா ,தனுசு ராசி நேயர்களே டிரைலர் வெளியான பிறகு தமிழ் நாட்டில் உள்ள ரசிகர்கள் தொடர்ந்து என் மீது அளவு கடந்த அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர். என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்த அவருக்கு நான் என்றென்றும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன்.

ஹரீஷ் கல்யாணுடன் இணைந்து பணியாற்றியது ஒரு சுவையான அனுபவம். அற்புதமான குணங்களைக் கொண்ட அவர் ஓர் அருமையான நடிகர். இப்படத்தில் நடத்த நடிக நடிகையர் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவரும் எனக்கு மிகவும் ஆதரவாக இருந்து, நன்கு கவனித்துக் கொண்டார்கள். என்கிறார் டிகன்கனா சூர்யவன்ஷி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *