Home / சினிமா / கெட்ட வார்த்தையால் விளாசித்தள்ளிய நடிகை மீனா

கெட்ட வார்த்தையால் விளாசித்தள்ளிய நடிகை மீனா

நடிகை மீனா முதன் முறையாக கரோலின் காமாட்சி என்ற வெப் சீரிஸில் நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர்தான் நடிகை மீனா .

இவரின் காமாட்சி வெப் சீரிஸில் நடிகர் ஒ.ஜி.மகேந்திரனும் நடித்திருக்கிறார். இந்த வெப் சீரிஸின் அறிமுக விழா சென்னையில் நடந்தது. மீனா, ஒ.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

அப்போது, இந்த வெப் சீரிஸில் நடிகை மீனா, ஆபாசமான வார்த்தைகளை அதிகம் பேசி நடித்திருப்பதாக கேள்விபட்டோமே அது உண்மையா? என, நடிகை மீனாவிடமே பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். இது எவ்வளவு உண்மை தன்மையென்பது யாரும் அறியாதது , இதற்க்கு பதில் கூற அறியாது தயங்கினாராம் நடிகை மீனா .

இதை பார்த்துக்கொண்டிருந்த நடிகர் ஒ.ஜி.மகேந்திரன் பதில் அளித்தார். அதில் அவர் கூறியதாவது: இந்த வெப் சீரிஸில், நடிகை மீனா உறுதியான கேரக்டரில் நடித்திருக்கிறார். அவர் நடிப்பு பாராட்டத்தக்கது இந்த கேரக்டருக்காக கெட்ட வார்த்தை பேசித்தான் ஆக வேண்டும். அதனால்தான் பேசினார் .

வெப் சீரிஸ் ஒளிபரப்பாகும் போது பாருங்கள். ஒவ்வொருவரும், நடிகை மீனா கெட்ட வார்த்தை பேசித்தான் ஆக வேண்டும் என்பதை உணருவீர்கள் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *