காமெடியன்களில் தமிழ் சினிமாவில் யோகி பாபுவுக்கு தான் இப்போது லக் அடித்துள்ளது. கடந்த வருடம் மட்டுமே 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த யோகி பாபு இந்த வருடம் இதற்குள் கைவசமாக 16 படங்கள் வைத்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக யோகி பாபுவுக்கு எப்போது திருமணம் என்று தான் பலரும் கேட்டு வந்தனர். எதாவது விருது விழாவுக்கு சென்றால் கூட அவரிடம் கேட்கப்படும் முதல் கேள்வி இதுவாகத்தான் இருக்கும்.
இந்நிலையில் யோகிபாபுவுக்கு திருமணம் நாளை அவர் சொந்த ஊரில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் நடக்கின்றது.
இது பற்றி கூறுகையில் பெற்றோர் பார்த்த பெண் தான். சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர். என் குடும்பத்தை நன்றாக பார்த்துக்கொள்பவராக தேடினேன். அதே குணத்துடன் பெண் கிடைத்துவிட்டார்” என்றார்.