இசையமைப்பாளர் அனிருத்திற்கென்று அதிக ரசிகர் கூட்டம் உள்ளது. அண்மையில் மாஸ்டர்இப்படத்தில் இருந்து விஜய் அவர்களின் சொந்த குரலில் பாடி ஒரு குட்டி ஸ்டோரி எனும் பாடல் வெளிவந்திருந்தது.
இந்த பாடலுக்கு மிக அருமையான முறையில் இசையமைத்திருந்தார் அனிருத். இப்பாடல் வெளிவந்த யூடியூபில் பல பல சாதனைகளை செய்து வந்தது.
இந்நிலையில் அனிருத் முன் 8 வருடங்களுக்கு முன் திருமண கச்சேரியில் கீபோர்டு வாசிக்கும் வீடியோ யூடியூபில் ஒருவர் பதிவிட்டுள்ளார். இது அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமாவதற்கு முன்பு எடுக்கப்பட்டது.
தற்போது அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து விடியோவை வெளியிட்டவருக்கு நன்றி என கூறியுள்ளார் அனிருத்.