நடிகை கீர்த்தி சுரேஷ் தனது திரையுலக பயணத்தை முதன் முதலில் மலையாளத்தில் இருந்து தான் ஆரம்பித்தார். அதன்பின் தமிழில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்த இது என்ன மாயம் எனும் படத்தின் மூலம் அறிமுகமானார்.
தற்போது தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர். 2018 ஆம் ஆண்டு வெளிவந்த நடிகையர் திலகம் படத்திற்கு கூட இவருக்கு தேசிய விருது கிடைத்தது.
இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் சிறுவயதில் இருந்த புகைப்படத்தை ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள். அதில் அவர் சிறுவதில் மொட்டையுடன் எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாகி பரவி வருகிறது.
27 வயதாகும் இவருக்கு தற்போது திருமணம் செய்ய இவரது தந்தை சுரேஷ்குமார் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.