நயன்தாரா இன்று தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கும் அளவிற்கு முன்னேறியுள்ளார். நயன்தாரா தனது சினிமா பயணத்தில் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தவர்.
சிம்பு, பிரபுதேவாவுடன் காதல் சர்ச்சைகளில் சிக்கி பல்வேறு இன்னல்களை சந்தித்தவர். தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்துவருகிறார் நயன்தாரா.
இந்நிலையில் பிரபுதேவாவின் முன்னாள் மனைவி ரமலத் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது.
நயன்தாரா என் கணவரை திருடிவிட்டார். நயன்தாராவை நான் எங்காவது பார்த்தால் உதைப்பேன். அவர் ஒரு தவறான பெண் என்று தெரிவித்துள்ளார். இது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.