பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சில வருடங்களாக தென்னிந்தியாவில் அதிகம் ஈர்ப்பை பெற்று வருகிறது. இதில் தமிழில் பிக்பாஸ் சீசன் 4 ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு சூழ்ந்துள்ளது.
இந்த சீசனையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கவுள்ளார். அவரின் தோற்றம் ஒவ்வொரு சீசனுக்கும் வித்தியாசம் காட்டி வருகிறார். பிக்பாஸ் 4 சீசனில் 15 அல்லது 18 பேர் உள்ளார்களாம்.
இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 4 மொத்தம் போட்டியாளர்களின் லிஸ்ட் தற்போது இணையத்தில் வைரலாகி பரவி வருகிறது.
அதில் நடிகை சாந்தினி, சரவணன் மீனாட்சி சீரியல் நடிகர் இர்பான், விசித்ரா, சின்மயி, நடிகர் விமல், நடிகர் ராதா ரவி, தொகுப்பாளினி டிடி, நடிகை மீனா, சரண் சக்தி, ரமேஷ் திலக், ரட்சிதா, ரம்யா பாண்டியன், வித்யுலேகா ராமன், சத்யன், ஸ்ரீமண், சஞ்சனா சிங், சர்ச்சையில் சிக்கிய ஈஸ்வர் மற்றும் அவரது மனைவி ஜெயஸ்ரீ, ஆகியோரின் பெயர் வெளியானது.
இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.