இன்று ஒட்டு மொத்த அஜித் ரசிகர்களும் அஜித்தின் பிறந்தநாளை இணையத்தில் கோலாகலமாக கொண்டாடும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
தற்போது ட்விட்டரில் தல ரசிகர்கள் #HBDDearestThalaAJITH என்ற ஹாஷ்டாகை 5 மில்லியனுக்கும் அதிகமான ட்வீட்களின் மூலம் உலக அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது.
இதனால் தற்போது விஜய் ரசிகர்களும் #VijayTheFaceOfKollywood என்ற ஹாஷ்டாகை உருவாக்கி ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இதனால் ரசிகர்களுக்கிடையே ட்விட்டரில் கடும் போட்டி நிலவி வருகிறது.
மேலும் சமீபத்தில் கொரோனா காரணமாக தனது பிறந்த நாள் கொண்டாட்டம் எல்லாம் வேண்டாம் என ரசிகர்களை கேட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.