காசி கைது செய்யப்பட்ட நிலையில், பெண்களுடன் அந்தரங்கமாக அவர் இருப்பது போன்ற படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.
இந்நிலையில் காசியின் வலையில் பிரபல நடிகரின் மகள் சிக்கியுள்ளதாக கூறப்படுகின்றது. அது யார் என்று திட்டவட்டமாக வெளியில் தெரியவில்லை. அதுமட்டுமன்றி கட்சி பிரமுகர்கள் பலருக்கும் தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து காசியின் வீட்டில் அவரது செல்போன், லேப்டாப், 2 ஹார்ட் டிஸ்க், 7 ஏடிஎம். கார்டுகளை பறிமுதல் செய்தனர். அதில் 100 பெண்களின் வீடியோக்கள் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ந்தனர்.
பெண்களை ஏமாற்றி சம்பாதித்த பணத்தில், நான்கு அடுக்கு மாடி கொண்ட கட்டிடத்தை கட்டியுள்ளதுடன் வட்டிக்கு பணம்விட்டு சம்பாதித்துள்ளார்.
நாகர்கோவில், கன்னியாகுமரியைச் சேர்ந்த காசியின் 7 நண்பர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.