பிக்பாஸ் 4வது சீசன் துவங்கி ஒரு வாரத்திற்குள் தினமும் சண்டை, மோதல், கண்ணீர் என பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் விதவிதமாக சண்டைகள்.
இந்நிலையில் பிரபல தொகுப்பாளினி அர்ச்சனா பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிக்பாஸ் 4வது ஒருவராக அர்ச்சனா கலந்துகொள்ள இருந்தார். ஆனால் அர்ச்சனா பணிபுரியும் சேனல் நிர்வாகம் அதற்கு மறுப்பு தெரிவித்ததால் முதலில் அவர் செலவில்லை.
தற்போது நிர்வாகம் அவருக்கு அனுமதி அளித்துள்ளதால். அர்ச்சனா பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல தயாராகி வருகிறாராம்.
எனினும் இதுவரை யார் பிக்பாஸ் வீட்டில் அடுத்து நுழையப்போகும் பிரபல என்று விஜய் டிவி அறிவிக்கவில்லை என்பது குறிப்பிட தக்கது.