Home / சினிமா / விஜய்யின் 66வது படம் பற்றிய தகவலை முதல்முறையாக வெளியிட்ட இயக்குனர் வம்சி

விஜய்யின் 66வது படம் பற்றிய தகவலை முதல்முறையாக வெளியிட்ட இயக்குனர் வம்சி

மாஸ்டர் படத்துக்கு அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள திரைப்படம் தளபதி 65. முதல்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது.

அடுத்தகட்ட படப்பிடிப்பு ஊரடங்கு முடிவுக்கு வந்ததும் சென்னையில் நடைபெறும் என்பதும் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் அல்லது தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் விஜய்யின் 66 வது படம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. தோழா படத்தை இயக்கியவர் பிரபல தெலுங்கு இயக்குநரான வம்சி விஜய்யின் 66 வது படத்தை இயக்கவுள்ளார்.

இதுபற்றி இயக்குனர் வம்சி கூறுகையில் “நான் விஜய் படத்தை இயக்க இருப்பது உண்மைதான். இதனை பெரிய வாய்ப்பாக கருதுகிறேன்” என்கிறார்.

வம்சி இதுவரை தோழா உள்பட ஐந்து படங்களை இயக்கியுள்ளார். 2019 இல் மகேஷ் பாபு நடிப்பில் வம்சி இயக்கிய மஹர்ஷி, சிறந்த பொழுதுபோக்குப் படத்துக்கான தேசிய விருதைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *