ஒரு காலத்தில் முன்னணி நடிகர்களையே கலங்க வைத்தவர் நடிகை ஷகிலா. அந்தளவுக்கு வெற்றிப்படங்களை கொடுத்த இவர் பெரும்பாலும் ஆபாச படங்களில் தான் நடித்துள்ளார்.
தமிழில் நடித்துள்ள படங்களிலும் அந்த மாதிரியான வேடங்களில் தான் தோன்றுவார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், நான் நல்ல வேடங்களில் நடிக்க விரும்புகிறேன். ஆனால் யாரும் தர தயாராக இல்லை என்று கூறினார்.
மேலும், இவர் பலமுறை தற்கொலைக்காக முயற்சித்தாராம். ஆனால் காதல் தோல்விக்காக கிடையாதாம். இவர் அம்மா எப்போதும் இவரை நம்ப மாட்டாராம்.
இதற்காக தற்கொலை முயற்சித்தேன் அப்போது கூட அவர் சாதாரணமாக ஹாஸ்பிட்டலுக்கு போய் கட்டுப்போட்டுக்கோ என்று தான் கூறியுள்ளார் என்று வேதனையோடு தெரிவித்தார். இவர் மேலும் பலமுறை காதலில் தோற்றுள்ளேன் என்றும் கூறியுள்ளார்.