சிம்பு நடிகை நயன்தாராவுடன் வல்லவன் படப்பிடிப்பின் போது காதலில் இருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே.
நடிகர் சிம்புவின் காதல் முறிவிற்கு பிறகு நயன்தாரா – பிரபு தேவா காதல் அத்தியாயம் தொடங்கியது. பின் சிறிது காலத்துக்கு பின் பிரிந்து விட்டார்கள். தன்னைக் கல்யாணம் செய்து கொள்வதாகக் கூறிவிட்டு, வேறு பெண்ணுடன் பிரபு தேவா நெருக்கமாகிவிட்டதால் இந்தப் பிரிவு வந்ததாக நயன்தாரா தரப்பு கூறியது.
இந்நிலையில் பிரபு தேவாவின் அடுத்த தமிழ் படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாராவை நடிக்க வைப்பதற்கு முயற்சித்த போது நயன்தாரா மறுத்து விட்டார்.
இது குறித்து நயன்தாரா கூறுகையில் அவரை மிகவும் நம்பினேன் அவர் என்னை ஏமாற்றி விட்டார். என்னை ஏமாறியவரின் படங்களில் நடிக்கமாட்டேன் என்று கண்ணீருடன் கூறினார்.