தமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி மிகவும் அபாரமானது. தற்போது தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய நடிகராக விளங்கி வருகிறார்.
நடிகர் தல அஜித்துடன், சிவகார்த்திகேயன் இணைந்து நடித்திருக்கிறார். இதற்கான ஆதாரமாக புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களி்ல் தீயாய் பரவி வருகின்றது.
தல அஜித்தின் பேவரைட் போட்டோகிராபர் சிற்றரசு சமீபத்தில் இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ஏகன் படத்துல இரண்டு பேருக்கும் ஒரு காட்சி இருந்ததாகவும், ஆனால் அந்த படத்தில் குறித்த காட்சி நீக்கப்பட்டதாகவும் சிற்றரசு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த தகவல் அறிந்த சிவகார்த்திகேயன் ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளார்களாம். அது மட்டும் இன்றி சிவகார்த்திகேயனின் வளர்ச்சியையும் பலர் பாராட்டியுள்ளனர்.