தல அஜித் விஸ்வாசம் படத்திற்கு பிறகு இயக்குனர் வினோத்துடன் இணைகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. தல59 என்றழைக்கப்படும் இப்படத்தின் பூஜை எளிமையாக சென்னையில் நடந்துள்ளது.
இதில் கடவுள் படங்களுடன் சேர்த்து மறைந்த ஸ்ரீதேவியின் புகைப்படத்துக்கும் மாலை அணிவித்து பூஜை நடந்துள்ளது.
ஏனெனில் இப்படத்தின் தயாரிப்பாளர் ஸ்ரீதேவியின் கணவரான போனி கபூர் தான். பூஜை முடிந்ததும் முதல்கட்ட படப்பிடிப்பு இன்றே ஆரம்பமானது.