Home / செய்திகள் / புதிய டிவி சேனல் தொடங்கும் ரஜினி..! பெயர் என்ன தெரியுமா..? விரைவில் ஆரம்பம்

புதிய டிவி சேனல் தொடங்கும் ரஜினி..! பெயர் என்ன தெரியுமா..? விரைவில் ஆரம்பம்

ரஜினி மக்கள் மன்றத்திற்காக புதிய தொலைக்காட்சி சேனலை தொடங்க நடிகர் ரஜினி காந்த் அனுமதி அளித்துள்ளார். புதிய தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள் தொடங்க இருப்பதாக ரஜினிகாந்த் மன்ற தலைமைக்கு கழக நிர்வாகியான VM சுதாகர் அறிவித்துள்ளார்.

தொலைக்காட்சி சேனல் தொடங்குவதற்காக ட்ரேட் மார்க்கெட்டில் பதிவு செய்துள்ளதாக ரஜினி கையொப்பமிட்ட அதிகாரப்பூர் தகவல் வெளியாகியுள்ளது.

திமுகவிற்காக கலைஞர் டிவி, அதிமுகவிற்காக ஜெயலலிதா இருந்தவரை ஜெயா டிவி, விஜயகாந்த் கேப்டன் டிவி என ஒவ்வொரு கட்சிகளும் தங்களுக்கான அதிகாரப்பூர்வமாக டிவி சேனல்கள் வைத்திருக்கின்றனர்.

இந்நிலையில் ரஜினிகாந்த் தனது கட்சிக்கான புதிய தொலைக்காட்சி தொடங்க விண்ணப்பித்திருக்கின்றனர். சூப்பர்ஸ்டார் டிவி, ரஜினி டிவி மற்றும் தலைவர் டிவி என மூன்று பெயரை பரிசீலிக்க விண்ணப்ப படிவத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *