முகேஷ் அம்பானி சமீபத்தில் தன்னுடைய மகள் திருமணத்தை உலகமே வியக்கும் வண்ணம் ரூ. 800 கோடி வரை செலவு செய்து பிரமாண்டமாக நடத்தினார்.
இவர் மும்பையில் வசிக்கும் அன்டிலா இல்லத்தின் சொத்துமதிப்பு 2 பில்லியன் டாலர் ஆகும். 27 மாடி கொண்ட இந்த வீட்டில் 600 பேர் வேலை செய்கிறார்கள்.
இவர்களுக்கு ரூ. 2 லட்சம் வரை சம்பளமாக தருகிறாராம். வேலை செய்பவர்களை தன் குடும்பத்தில் ஒருவராகத்தான் நடத்துவாராம். தன் வீட்டில் பணியாற்றுகிறவர்களின் குழந்தைகளுக்கு இரண்டு லட்ச ரூபாய் மதிப்பிலான கல்வி உதவித்தொகை வழங்குகிறார்.
அதோடு இரண்டு வேலைக்காரர்களின் குழந்தைகள் அமெரிக்காவில் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.
முகேஷ் அம்பானியின் வீட்டிற்கு இசட் பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த பாதுகாப்பு வீரர்களுக்கு மாதம் பதினைந்து லட்சம் வரை வழங்குகிறார்.
முகேஷ் அம்பானி கடந்த 10 ஆண்டுகளாக 15 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பளம் அவரே நிர்ணயித்து கொண்டார்.